/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலர் விபத்துக்களில் இருவர் பலி
/
டூவீலர் விபத்துக்களில் இருவர் பலி
ADDED : மே 24, 2024 02:03 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.
வத்திராயிருப்பு தாலுகா மேலகோபாலபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி, 42, இவர் நேற்று முன் தினம் இரவு தனது டூவீலரில் கிருஷ்ணன் கோவிலை நோக்கி வந்துள்ளார். எதிரே டூவீலரில் வந்த அர்ச்சனாபுரத்தைச் சேர்ந்த குருவையா,60, டூவீலரில் மோதியுள்ளார். இதில் இருவரும் ரோட்டில் விழுந்த நிலையில் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் பால்பாண்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த குருவையா, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்தனர்.
*ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் கோபிநாத் 20, சிவகாசியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை தனது நண்பர்கள் கோவிந்தராஜ், ஆறுமுகம் இருவருடன் சேர்ந்து, மூவரும் ஒரு டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்துள்ளனர்.
மல்லி அருகே ரோட்டின் வளைவில் சறுக்கி விழுந்ததில் கோபிநாத் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மல்லி போலீசார் விசாரித்தனர்.