/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு சம்பவங்களில் இருவர் தற்கொலை
/
இரு சம்பவங்களில் இருவர் தற்கொலை
ADDED : ஏப் 26, 2024 01:03 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணபேரியை சேர்ந்தவர் முனியாண்டி, 50, இவரது மனைவி முத்துலட்சுமி, 46, தம்பதியின் மகன் அன்பு ராமச்சந்திரன்.21, இதில் கணவர் முனியாண்டிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் சரி வர வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். மகன் அன்பு ராமச்சந்திரன் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த முத்துலட்சுமி, ஏப்ரல் 21 மாலை 5:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் காலை ஊருக்கு வட மேற்கே உள்ள ஒரு கிணற்றில் இறந்து கிடந்துள்ளார்.
மற்றொரு சம்பவம், அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 55, கூலி தொழிலாளி. கல்லடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம் வலி அதிகமானதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்வதாக கூறிச் சென்றவர் சுடுகாட்டு அருகில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரு சம்பவங்கள் குறித்தும் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

