/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் நான்கு வழிச்சாலை பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இருவர் பலி

ADDED : ஆக 20, 2024 04:45 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே திருமங்கலம்- - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் அர்ஜுனா நதியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தேனி மாவட்டம் போடி பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 20, ஜெயபிரகாஷ் 22 பலியாகினர்.
பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் ஜெயபிரகாஷ் 22, கல்லுாரி மாணவர். அதை ஊரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி 20, இருவரும் உறவினர்கள்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு இருவரும் தங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு விழாவிற்கு ஒரு டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 5:00 மணியளவில் திருமங்கலம்- - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் மூவரை வென்றான் அர்ஜுனா நதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆற்றுப் பாலத்தின் பள்ளத்தின் மறு கரையில் மோதி, ஒருவர் தரையிலும், மற்றொருவர் டூவீலருடன் தண்ணீருக்குள் மூழ்கியும் உயிரிழந்து கிடந்தனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு பார்த்த பாலம் கட்டுமான பணிக்கு வந்த தொழிலாளர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.