ADDED : ஆக 12, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் பூஞ்சன் 35. இவர் நேற்று காலை 9:15 மணிக்கு டூவீலரில் (ஹெல்மட் அணியவில்லை) ஆர்.ஆர்., நகரில் இருந்து நான்கு வழிச்சாலையில் விருதுநகருக்கு வந்தார்.
அப்போது புல்லலக்கோட்டை வளைவில் திரும்ப முயன்ற போது மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவயிடத்திலேயே பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.