/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே மீண்டும் நிறுத்தப்படும் டூவீலர்கள்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே மீண்டும் நிறுத்தப்படும் டூவீலர்கள்
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே மீண்டும் நிறுத்தப்படும் டூவீலர்கள்
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே மீண்டும் நிறுத்தப்படும் டூவீலர்கள்
ADDED : ஏப் 23, 2024 12:33 AM

சிவகாசி : சிவகாசியில் பஸ் ஸ்டாண்ட் எதிரே மீண்டும் மீண்டும் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கு வழி வகுக்கிறது.
சிவகாசியில் வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டின் அருகில் தான் உள்ளது. சிவகாசி நகரில் உள்பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளுமே மிகவும் குறுகலாக உள்ளன.
பொதுவாக ஒரு நிறுவனமோ, கடையோ எதுவாக இருந்தாலும், அதனை அமைக்கும் இடத்தில் வாடிக்கையாளர்களின் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் சிவகாசியில் ஒரு சில பெரிய நிறுவனங்கள், கடைகளைத் தவிர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது டூவீலர்களை ரோட்டின் அருகிலும், ரோட்டின் மேலேயும் நிறுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர்.
சிவகாசியில் சேர்மன் சண்முக நாடார் ரோடு, பி.எஸ்.ஆர்., ரோடு,, என்.ஆர்.கே., ரோடு, அண்ணாதுரை காய்கறி மார்க்கெட், காந்தி ரோடு, என பல இடங்களில் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டு மற்ற வாகனங்கள் செல்ல தடை ஏற்படுகிறது.
முக்கியமாக பஸ் ஸ்டாண்ட் எதிரே நிறுத்தப்படும் டூவீலர்களால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்கள் எளிதாக வளைந்து செல்ல முடியவில்லை. இதனால் பஸ் வெளியேறும் ஒவ்வொரு முறையும் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படவும் வழி வகுக்கிறது.
அவ்வப்போது இங்கே டூவீலர் நிறுத்துவதற்கு தடை விதித்தாலும் மீண்டும் இதே நிலை தொடர்கின்றது. எனவே பஸ் ஸ்டாண்ட் எதிரே டூவீலர்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

