/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுத்தம் செய்யப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி விருதுநகர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
சுத்தம் செய்யப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி விருதுநகர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்
சுத்தம் செய்யப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி விருதுநகர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்
சுத்தம் செய்யப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி விருதுநகர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஜூலை 09, 2024 04:29 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி மதுரை ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் அந்த தொட்டி பாசி படர்ந்து பச்சை நிறத்திலும், சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும்வகையிலும் மோசமான நிலையில் உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் முன்பு மாதம் தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டும். கடைசியாக எப்போது சுத்தம் செய்யப்பட்டது என்ற விவரம் தொட்டியில் எழுதி போடப்பட்டிருக்கும். ஆனால் இப்போது எந்த தொட்டியிலும் அந்த தகவல்கள் விவரங்கள் இல்லை.
புதுப்பிக்க வர்ணம் பூசும் போது அதையும் சேர்த்து அடித்து மறைத்து விட்டனர். ஊராட்சிகள் பலவற்றில் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் நெளிகின்றன. அசுத்தமான நிலையில் உள்ளன. பல ஓ.எச்.டி., ஆபரேட்டர்களுக்கு வயதானதால் மேலே ஏறி சென்று தொட்டியின் நிலையை பார்ப்பதில்லை.
மேலும் ஆட்களை வைத்து சுத்தம் செய்வதும்கிடையாது. இதற்கு அப்படியே எதிர்நிலை தான் தற்போது பராமரிக்க ஆள் இருந்தும் விருதுநகர் நகராட்சியில் தொடர்கிறது.
குறிப்பாக விருதுநகர்நகராட்சியில் மதுரை ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் துவங்கி லெட்சுமி காலனி, கச்சேரி ரோடு, கிழக்கு, மேற்கு பாண்டியன் காலனிகள் வரை வினியோகம் நடக்கிறது.
இந்த தொட்டி பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாக புகார் உள்ளது. கடைசியாக எப்போது சுத்தம் செய்யப்பட்டது என்ற விவரமும் இல்லை. இங்கிருந்து வெளியேறும் குடிநீரால் டைரியா உள்ளிட்ட நோய் தொற்று அபாயம் அதிகம் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே தொட்டியை சுத்தம் செய்து குடிநீரை முறைப்படி வினியோகிக்க வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் இதை செய்தால் மட்டுமே நீர் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.