/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆவணங்கள் இல்லாத ரூ. 4.04 லட்சம் பறிமுதல்
/
ஆவணங்கள் இல்லாத ரூ. 4.04 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 23, 2024 05:06 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்துார் விலக்கில் ஆண்டாள் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். டூவீலரில் வந்த செல்வகுமாரிடம் சோதனை செய்ததில் ரூ.78,800 தகுந்த ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
* மதுரை ரோட்டில் பங்கஜம் தலைமையிலான பறக்கும் படையினர் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். வாசுதேவநல்லூரில் இருந்து மதுரைக்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க ரூ.73 ஆயிரம் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதால் கைப்பற்றப்பட்டது.
* சத்திரப்பட்டி ரோட்டில் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் ஆட்டோவில் சென்ற மகேஸ்வரன் ரூ.64 ஆயிரம் கொண்டு சென்றதை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபாண்டியிடம் என மொத்தம் 2.15 லட்சம் ஒப்படைத்தனர்.
* சிவகாசி அருகே சாமிநத்தத்தில், கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் டூவீலரில் வந்த திருத்தங்கலைச் சேர்ந்த அருட்பிரகாஷ் 25, என்பவரை சோதனை செய்கையில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ. 57 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
* அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் ரோடு சந்திப்பில், நேற்று மாலை 5 மணிக்கு தேர்தல் பறக்கும் படை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி தலைமையிலான குழுவினர் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது ஆவணமின்றி இருந்த ரூ 1.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

