/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒப்பந்ததாரரை ஏன் கருப்பு பட்டியலில் வைக்கவில்லை மத்திய இணையமைச்சர் கேள்வி
/
ஒப்பந்ததாரரை ஏன் கருப்பு பட்டியலில் வைக்கவில்லை மத்திய இணையமைச்சர் கேள்வி
ஒப்பந்ததாரரை ஏன் கருப்பு பட்டியலில் வைக்கவில்லை மத்திய இணையமைச்சர் கேள்வி
ஒப்பந்ததாரரை ஏன் கருப்பு பட்டியலில் வைக்கவில்லை மத்திய இணையமைச்சர் கேள்வி
ADDED : செப் 17, 2024 04:38 AM

விருதுநகர் : விருதுநகர் ரோசல்பட்டி குமராபுரம் இந்திராகாலனியில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பை பார்வையிட வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சுகாதார வளாகத்தில் தண்ணீர், மின் வசதி இல்லாததை கண்டித்து ஒப்பந்ததாரரை ஏன் கருப்பு பட்டியலில் வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
விருதுநகரில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை கூட்டத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பட்டியலின மக்கள் வசிக்கும் ரோசல்பட்டி குமராபுரம் இந்திரா காலனியை பார்வையிட்டார். அப்போது சுகாதார வளாகத்திற்கு தண்ணீர், மின் வசதி இல்லாததை கண்டித்து ஒப்பந்ததாரை ஏன் கருப்பு பட்டியலில் வைக்கவில்லை என ஆர்.டி.ஓ., சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினார். அம்மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் இடிந்துள்ளதையும் பார்வையிட்டார். பண்ணை குட்டை பணிகள் துவங்காது என்று உறுதி அளித்தார்.
பின் அவர் கூறியதாவது: போலி சமூக நிதி, திராவிட மாடல் ஆட்சிக்கான சிறந்த உதாரணம் விருதுநகர் ரோசல்பட்டி குமராபுரம். பட்டியலின மக்கள் வசிக்கும் அங்கு எந்த அடிப்படை வசதியுமில்லை. ஜல் ஜீவனில் குழாய் போட்டுள்ளனர் குடிநீர் வரவில்லை. சாக்கடை, குப்பை அள்ளப்படவில்லை. வீடுகள் எல்லாமே 1996ல் கட்டி கொடுத்தது. சின்ன வீட்டில் நான்கு குடும்பங்கள் வரை இக்கட்டான சூழலில் வசிக்கின்றனர். அவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வேண்டும். மாவட்ட நிர்வாகம் சீக்கிரமே பட்டா தருவதாக உறுதி அளித்தனர், என்றார்.
தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் பங்கேற்றார். பூத்தில் சென்றும், விருதுநகர் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றும் மத்திய இணையமைச்சர் உறுப்பினர்களை சேர்த்தார். உடன் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் பங்கேற்றனர்.