ADDED : ஜூன் 30, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி, : நரிக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் 3 மாதங்களாக கூட்டம் நடத்தவில்லை.
இந்நிலையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஒன்றிய தலைவர் காளீஸ்வரி, துணைத் தலைவர் ரவிச்சந்திரன், 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 1 சுயேட்சை கவுன்சிலர் மட்டுமே வந்தனர்.
போதிய கவுன்சிலர்கள் இல்லாததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது.