ADDED : ஆக 19, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி ஆப் இந்தியா சேப்டர் துவக்க விழா நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணைவேந்தர் டாக்டர் அறிவழகி, துணை தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சக்திவேல் வரவேற்றார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், டீன் ஷெர்லி ஜோசப், துறை தலைவர் அருண் பிரசாத், டாக்டர் செல்வி தேவி பேசினர். பேராசிரியர் காளிமுத்து குமார் நன்றி கூறினார்.