/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்
/
இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்
ADDED : ஆக 11, 2024 06:04 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டடம் முழுவதும் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு செல்வதற்கே மக்கள், ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
செங்கோட்டையில் மக்களின் தேவைக்காக வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி 20 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. இதை முறையாக பராமரிக்காததால் பல சுவர்களில் விரிசல் விழுந்துள்ளது. மேலும் வெளி சுவர்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து செங்கல்கள் தெரியும் நிலையில் உள்ளது. தரைதளத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கூரையில் தளகற்கள் முற்றிலும் சேதமாகியுள்ளது.
இங்கு பட்டா, சிட்டா அடங்கல், பட்டா பெயர் மாற்றம், நகல் உள்பட பல தேவைகளுக்கு விவசாயிகள், அப்பகுதியினர் தினமும் வந்து செல்கின்றனர். இந்த கட்டடம் முழுவதும் சேதமாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள், மக்கள் வருவதற்கே அஞ்சுகின்றனர்.
இதை இடித்து விட்டு புதிய வி.ஏ.ஓ., அலுவலகம் கட்ட வேண்டும்.