/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க.,-காங்., மீது வாசன் தாக்கு
/
தி.மு.க.,-காங்., மீது வாசன் தாக்கு
ADDED : ஏப் 04, 2024 11:42 PM
திருப்பரங்குன்றம் : விருதுநகர் பா.ஜ, வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது:
மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கு தகுதியான வேட்பாளர் ராதிகா. திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகை நறுமண தொழிற்சாலை அமைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுவார்.
கச்சத்தீவு குறித்து தி.மு.க.,வும், அ.தி.மு.க., வும் மாறி மாறி குறை சொல்லி வருகிறார்கள். இது ஒரு வரலாற்று பிழை. அன்றைக்கு காங்., தலைமையிலான மத்திய அரசு எடுத்த முடிவுக்கு தி.மு.க., உடந்தையாக செயல்பட்டது என்பதையாரும் மறுக்க முடியாது. மீனவர்கள் இனி ஒருபோதும் தி.மு.க., காங்கிரசை நம்ப மாட்டார்கள் என்றார்.

