/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பு- பிளவக்கல் அணை ரோட்டை அகலப்படுத்த வேண்டும்; வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ADDED : மார் 01, 2025 05:53 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பிலிருந்து பிளவக்கல் அணை வரையுள்ள ரோட்டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனை தவிர்க்க ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பிலிருந்து கூமாபட்டி ராமசாமியாபுரம், கொடிக்குளம், ரஹமத் நகர், கிழவன் கோயில் வழியாக பிளவக்கல் அணை வரையுள்ள மாநில நெடுஞ்சாலை ரோடு வழியாக டூவீலர்கள், கார்கள், வேன், பஸ்கள், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய லாரிகள் அதிகளவில் பயணித்து வருகிறது.
ஆனால், ரோடு போதிய அகலம் இல்லாமல் குறுகியதாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு- கூமாப்பட்டிக்கு இடையே உள்ள கண்மாய் கரையில் ரோடு போதிய அகலமில்லாமலும், தடுப்பு சுவர் இல்லாமலும் எதிரும், புதிரும் வாகனங்கள் வரும்போது விபத்து அபாயம் ஏற்படுகிறது.
மேலும் கூமாபட்டியில் இருந்து பிளவக்கல் அணை வரை விவசாய விளை பொருட்கள் ஏற்ற வரும் லாரிகள், கதிர் அடிக்கும் எந்திரங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இந்த ரோட்டை அகலப்படுத்தி, கண்மாய் கரைகளில் தடுப்பு சுவர்கள் அமைத்து பாதுகாப்பான பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.