/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எலியார்பத்தி டோல்கேட்டில் ஒரே வழித்தடத்தில் வாகனங்கள்
/
எலியார்பத்தி டோல்கேட்டில் ஒரே வழித்தடத்தில் வாகனங்கள்
எலியார்பத்தி டோல்கேட்டில் ஒரே வழித்தடத்தில் வாகனங்கள்
எலியார்பத்தி டோல்கேட்டில் ஒரே வழித்தடத்தில் வாகனங்கள்
ADDED : ஆக 04, 2024 06:16 AM
காரியாபட்டி: மதுரை -தூத்துக்குடி நான்கு வழிச் சாலை எலியார்பத்தி டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யும் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ஒரு பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலை எலியார்பத்தியில் டோல்கேட் உள்ளது. தனியார் நிறுவனம் இதனை நிர்வகித்து வந்தது. சரிவர நிர்வகிக்காததால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. , தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்று நடத்தி வருகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது.
இந்த ரோடு படு மோசமாக ஆங்காங்கே குண்டும் குழியுமாக வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. பாலங்கள் சேதமடைந்துள்ளன. பிரிவு ரோடுகளில் சிக்னல்கள், ஹைமாஸ் விளக்குகள் ஆங்காங்கே சரிவர எரியவில்லை. மதுரை -தூத்துக்குடி 125 கி.மீ., துாரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. இது ஒரு புறம் இருக்க, இரு டோல்கேட்டுகள் உள்ளன.
இதில் மதுரை எலியார்பத்தி டோல்கேட்டில் சரிவர விளக்குகள் எரியவில்லை. இரு மார்க்கத்திலும் கட்டணம் வசூல் செய்ய 4 வழித்தடங்கள் உள்ளன. கட்டணம் வசூல் செய்யும் ஒரு வழித்தடத்தில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. சிக்னல்கள் சரிவர செயல்படாததால் நீண்ட நேரம் ஆகிறது. ஆத்திரமடைந்து வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் வாகன ஓட்டிகள் முறையிட்டும் முறையான பதில், சீரமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை . 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தாலே கட்டணம் வசூல் செய்யக்கூடாது என விதி இருக்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்தும் கட்டணம் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாதது, மணி கணக்கில் காத்திருக்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
டோல்கேட்டில் உள்ள அனைத்து கட்டண வசூல் வழித்தடங்களயும் சீரமைத்து திறந்து விட நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.