ADDED : ஆக 25, 2024 04:03 AM
நரிக்குடி: நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் அஞ்சல் துறை சார்பாக கிராமிய அஞ்சல் சபை கூட்டம் நடந்தது. அஞ்சலக உபகோட்ட துணை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். நரிக்குடி துணை அஞ்சலக அதிகாரி சுரேஷ் முன்னிலை வகித்தார். அஞ்சல் துறையில் முக்கிய திட்டங்களான சிறுசேமிப்பு,
தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள், செல்வமகன், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம், மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் குறித்து விளக்கப்பட்டது. 100 நாள் வேலைத்திட்ட சம்பளம், முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு சேவைகள் அஞ்சல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறையான அஞ்சல் துறையின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஊராட்சித் தலைவர் முத்துமாரி, ஒன்றிய கவுன்சிலர் சரளாதேவி, துணை பி.டி.ஓ., உமாசங்கரி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சோணை முத்து, எஸ்.ஐ., திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நரிக்குடி வட்டார அஞ்சல் துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.