/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.1000 லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலர்கள் கைது
/
ரூ.1000 லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலர்கள் கைது
ADDED : ஆக 01, 2024 11:23 PM

விருதுநகர்:விருதுநகர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். மனைவி பாண்டீஸ்வரி, 24. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தங்கள் மகள்களுக்கு தலா, 25,000 ரூபாய் நிரந்தர வைப்பு நிதிக்கான பத்திரம் பெற நவ., 23ல் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பத்தின் நிலையை அறிய விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் அலுவலகத்தின் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி, 56, என்பவரை அணுகினர். விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, 1,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, முருகேஸ்வரி கூறினார்.
ஜெயமுருகன் புகாரின்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜெயமுருகனிடம், 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற ஊர் நல அலுவலர்கள் லதாவேணி, 56, முருகேஸ்வரி ஆகியோரை விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.