/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் --- சிவகாசி ரோட்டில் பள்ளங்கள்; உதிரிபாகங்கள் கழறும் நிலை
/
விருதுநகர் --- சிவகாசி ரோட்டில் பள்ளங்கள்; உதிரிபாகங்கள் கழறும் நிலை
விருதுநகர் --- சிவகாசி ரோட்டில் பள்ளங்கள்; உதிரிபாகங்கள் கழறும் நிலை
விருதுநகர் --- சிவகாசி ரோட்டில் பள்ளங்கள்; உதிரிபாகங்கள் கழறும் நிலை
ADDED : செப் 01, 2024 11:55 PM

விருதுநகர் : விருதுநகர் -- சிவகாசி ரோட்டில் பள்ளங்களால் நிறைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது உதிரிபாகங்கள் கழன்று விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் ரோடு பள்ளங்களால் நிறைந்துள்ளது. இந்த பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் கனரக வாகனங்கள், கார், ஆட்டோ, டூவீலர் ஆகியவை தினமும் திண்டாடுகின்றன.
இப்பள்ளங்களை கடந்து செல்வதற்குள் உதிரிபாகங்கள் ஆட்டம் கண்டு கழன்று விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆமத்துார், செங்குன்றாபுரம், மீசலுார், செங்கோட்டை உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் இருந்து விருதுநகருக்கு மருத்துவம், கல்லுாரி, பணிக்காக வருபவர்களுக்கு முக்கிய ரோடாக உள்ளது. இங்குள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் பல முறை கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் செவி சாய்க்கவில்லை.
இந்த பள்ளங்களால் இரவு நேரத்தில் டூவீலரில் செல்பவர்கள் இடறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
மேலும் சில நேரத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள பள்ளங்களை சரிசெய்யாதது கேள்வியை எழுப்புகிறது.
எனவே விருதுநகர் -- சிவகாசி ரோட்டில் உள்ள பள்ளங்களை ஜல்லி கற்கள் கொண்டு நிரப்பி தார் ஊற்றி நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.