/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
25 உடல்கள் தானம் பெற்ற விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி
/
25 உடல்கள் தானம் பெற்ற விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி
25 உடல்கள் தானம் பெற்ற விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி
25 உடல்கள் தானம் பெற்ற விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி
ADDED : ஜூலை 09, 2024 04:30 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் 25 உடல்கள்தானமாக பெறப்பட்டுஉள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை உட்பட தமிழகத்தில் 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளை 2022 ஜன. 12 ல் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து ஸ்கேன், எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனைகள்,சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவாவதால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை துவங்கியது முதல் இதுவரை 25 பேரின் உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து தகவல்கள் வைக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி மாவட்ட நிர்வாகம் மாணவர்கள், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் வருங்காலத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.