/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்பாட்டிற்கு வந்தது விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்
/
செயல்பாட்டிற்கு வந்தது விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்
செயல்பாட்டிற்கு வந்தது விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்
செயல்பாட்டிற்கு வந்தது விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஆக 22, 2024 02:23 AM

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. அனைத்து பஸ்களும் வந்து செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகரில் முன்னாள்முதல்வர் காமராஜ் பெயரை வைத்து 1992ல் திறக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் திறந்த மூன்று மாதங்களிலேயே செயல்பாடின்றி போனது.
அதன் பின்பு 2012ல் கலெக்டர் பாலாஜியின் முயற்சியால் பஸ் ஸ்டாண்ட் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.அவர் மாறுதலாகி சென்றதும் ஓட்டு அரசியலால் மூடப்பட்டது.
இந்நிலையில் கலெக்டர் ஜெயசீலன் முயற்சியால் நேற்று முதல் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்து மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, கள்ளிக்குடி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், தென்காசி, ராஜபாளையம் முதல் ராமேஸ்வரம் மார்க்கமாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பி.ஆர்.சி., அருகே போக்குவரத்து அதிகாரிகள் நின்று அரசு பஸ்கள் கட்டாயம் புது பஸ் ஸ்டாண்டிற்குள்செல்ல வேண்டும் என அனைத்து பை பாஸ் ரைடர் அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநரிடம் தெரிவித்தனர். சிவகாசி மேம்பாலத்தின் அடியில் போக்குவரத்து போலீசார் நெரிசல்ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிகளை செய்தனர்.
நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்சி, கொடைக்கானல், கோவை ஆகிய பிற மாவட்டங்களுக்கு விருதுநகர் வழியாக செல்லும் அரசு பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலையில் கணபதி மில் சந்திப்பில் கட்டுபாட்டு அறையில் போலீசார் தொடர் பணி, பஸ் ஸ்டாண்டில் டைம் கீப்பர் பணியமர்த்தப்பட்டனர். பயணிகள் சிரமமின்றி விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் வந்து செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.