/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடகள போட்டியில் வி.வி.வி., கல்லுாரி சாதனை
/
தடகள போட்டியில் வி.வி.வி., கல்லுாரி சாதனை
ADDED : ஆக 28, 2024 05:54 AM

விருதுநக : விருதுநகர் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியை சேர்ந்த 15 மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான 20 வயதிற்குட்பட்ட போட்டியில் கல்லுாரி தடகள மாணவி செ.காயத்ரி 400 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், ஹேமப்ரியா நுாறு மீட்டர் தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் 2ம் இடமும் அ.அன்வருண் நிஷா பேகம் குண்டு எறிதல் போட்டியில் 2ம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் 3ம் இடமும் தெ.லிங்கம்மாள் 200 மீட்டர் தடகள போட்டியில் 2ம் இடமும் பெற்றனர்.
இப்போட்டியில் மாணவி காயத்ரி தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், கல்லுாரி தடகள அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றது. கல்லுாரி நிர்வாகிகள் பழனிச்சாமி, மதன், இனிமை, முதல்வர் சிந்தனா, உடற்கல்வி இயக்குனர் ஜமிலா ஜோதிபாய் மாணவிகளை பாராட்டினர்.