/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காத்திருக்கும் விருந்தினர் மண்டப பணி
/
காத்திருக்கும் விருந்தினர் மண்டப பணி
ADDED : மே 13, 2024 12:32 AM

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக விருந்தினர் மண்டபம் ரூ.32 கோடி மதிப்பில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தங்குவதற்கும் விருந்து உண்ணுவதற்கு புதிய மண்டபங்கள், கடைகள், வணிக வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கருங்கல் தளம் பேவர் பிளாக் ரோடு அமைக்கும் நடைபெற்று வருகின்றன.
இருக்கன்குடி கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விருந்து மண்டபங்கள் சேதமடைந்து இடிந்து காணப்பட்டது. இதையடுத்து ரூ.32 கோடியில் தங்கும் வசதியோடும், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதியுடன் புதிய விருந்தினர் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதியாக தங்கி இருந்து சாமி தரிசனம் செய்யவும் உறவினர்களுடன் விருந்து சாப்பிட்டு மகிழவும் வசதி கிடைத்துள்ளது.
பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி கூறியதாவது: பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில புதிய விருந்தினர் மாளிகைகள் கட்டப்பட்டு வருகின்றன. பேன்,இருக்கை, படுக்கை, கழிப்பறை, குடிநீர், உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 10 சதவீத பணிகள் மட்டுமே மீதம் உள்ளது. விரைவில் பணிகள் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார்.