/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீணாகும் வைகை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
/
வீணாகும் வைகை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வீணாகும் வைகை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வீணாகும் வைகை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 27, 2024 05:54 AM

காரியாபட்டி : அருப்புக்கோட்டை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வைகை ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் காரியாபட்டி அருகே வீணாகி வருவதால், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மதுரை வைகை ஆற்றில் இருந்து ராட்சச குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. திருப்புவனம் துவங்கி அ.முக்குளம், முடுக்கன்குளம் வழியாக குழாய்கள் செல்கின்றன. தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சப்ளையாகிறது. குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் வழிகளில் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து ஏர் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் அடைப்பு ஏற்படாமல் தண்ணீர் சீராக குழாய்களில் செல்லும். அடைப்பு ஏற்பட்டால் கூட எளிதில் கண்டறிய முடியும். அந்த வகையில் காரியாபட்டி முடுக்கன்குளம் அருகே தொட்டி கட்டப்பட்டு ஏர் வால்வு அமைக்கப்பட்டுள்ளது. எங்கோ ஒரு இடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் செல்ல முடியாமல் இங்குள்ள ஏர் வால்வில் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி ஓடுகிறது.
3 நாட்களுக்கு மேல் ஆகியும் இதனை சரி செய்யப்படவில்லை. தற்போது குடிநீர் சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட்டு தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. வாரத்தில் ஒரு நாள், 15 நாட்களுக்கு ஒரு முறை என சப்ளை செய்யப்படுவதால் மக்கள் அல்லோலப்பட்டு வருகின்றனர். வீணாகி வரும் குடிநீரை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.