
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஞானகிரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 60. இவருக்கு என்.ஆர்.கே., ரோட்டில் சொந்தமாக கட்டடம் உள்ளது.
இரு தளம் கொண்ட இக்கட்டத்தில் வாட்ச் கடை இயங்கி வந்தது. இங்கு நேற்று 10 பேர் பணியில் இருந்தனர். மதியம் 2:30 மணி அளவில் திடீரென கட்டடத்தில் பால்ஸ் சீலிங் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டவுடன் ஐந்து பேர் உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறினர்.
இடிபாடுகளில் மாட்டிக் கொண்ட ஐந்து பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.