/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மார்ச் 23ல் தண்ணீர் தின கிராமசபை கூட்டம்
/
மார்ச் 23ல் தண்ணீர் தின கிராமசபை கூட்டம்
ADDED : மார் 15, 2025 05:03 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்திற்கு உட்பட்ட 450 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல் நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் மார்ச் 23ற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில் மழைநீர் சேகரிப்பு, சிக்கனமாக குடிநீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாப்பது, மறு சுழற்சி செய்வது, நிலத்தடி நீரை செறிவூட்டுவது, 2024 ஏப். 1 முதல் 2025 பிப். 28 வரை செலவுகளை ஆய்வு செய்தல், தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், குடிநீர் தொட்டிகளில் பராமரிக்க வேண்டிய அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே மக்கள் மார்ச் 23ல் நடக்கும் கிராமசபை கூட்டத்திற்கு பங்கேற்க வேண்டும், என்றார்.