/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை வெயிலால் அணைகளில் குறையும் நீர்மட்டம்
/
கோடை வெயிலால் அணைகளில் குறையும் நீர்மட்டம்
ADDED : மார் 07, 2025 06:57 AM
வத்திராயிருப்பு, : மேற்கு தொடர்ச்சி மலையில் கொளுத்தும் கோடை வெயிலால் வத்திராயிருப்பு தாலுகா பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர்மட்டம் பாதிக்கு பாதி அளவு குறைந்து காணப் படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2024 டிசம்பர் 2வது வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையினால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் 47.56 அடி உயரம் உள்ள பெரியாறு அணை அணையில் 38.49 அடி உயரத்திற்கும், 42.65 அடி உயரமுள்ள கோவிலாறு அணையில் 27.30 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியது.
இதனையடுத்து விவசாய பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால்பெரியகுளம், விராக சமுத்திரம் கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டது.
கடந்த 2 மாதங்களில் போதிய அளவில் மழை பெய்யாத நிலையில் அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைய துவங்கியது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகளவில் காணப்படுவதால் பாதிக்கு பாதி என்ற அளவில் அணைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.
தற்போது பெரியாறு அணையில் 27.69 அடி உயரத்திற்கும், கோவிலாறு அணையில் 21.85 அடி உயரத்திற்கும் தண்ணீர் உள்ளது. இதில் பெரியாறு அணையில் இருந்து 3 கன அடி தண்ணீர் மட்டும் தற்போது திறந்து விடப்படுகிறது.
அணைகளில் தண்ணீர் மட்டம் குறைவதால் கோடை சாகுபடிக்கு தயாரான விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.