/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர்
/
குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர்
ADDED : மார் 26, 2024 11:53 PM

சிவகாசி : சிவகாசி அருகே சித்துராஜபுரம் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஓடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பிற்காக பஸ் ஸ்டாப் வழியாக ரோட்டில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது. அதிகம் போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தவிர அருகில் பஸ் ஸ்டாப் இருப்பதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் சிரமப்படுகின்றனர்.
கோடை துவங்கும் முன்னரே வெயில் கொளுத்துவதால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே உடனடியாக குழாய் உடைப்பினை சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

