/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் 4 நாட்கள் குடிநீர் 'கட்'
/
அருப்புக்கோட்டையில் 4 நாட்கள் குடிநீர் 'கட்'
ADDED : பிப் 22, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, கமிஷனர் ராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அருப்புக்கோட்டை நகராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் தாமிரபரணி திட்டம் 1, மற்றும் 2ல், பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
வைகை திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணி முடிவடைந்து சோதனை ஓட்டம் செய்யும் பணி நடைபெற்று வருவதாலும், நகர் முழுவதும் பிப். 21 முதல் 24 வரை, 4 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.
பொதுமக்கள் குடிநீரை பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த கேட்டுக் கொள்ளுப்படுகிறது. என, கூறியுள்ளனர்.

