ADDED : மார் 02, 2025 05:54 AM

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் கோடை காலம் துவங்குவதை ஒட்டி தர்பூசணி விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.
அருப்புக்கோட்டையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. எனினும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
கோடை காலம் துவங்குகின்ற நிலையில் நகரில் தர்பூசணி விற்பனை களைகட்ட துவங்கியது. அருப்புகோட்டை அருகே வீரசோழன், மினாகுளம் பகுதிகளிலிருந்து தர்பூசணி பழங்கள் நகரின் பல இடங்களில் இறங்கியுள்ளது.
இந்தப் பகுதிகளில் இருந்து வரும் பழங்கள் ருசியாக இருப்பதால், மக்கள் விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். நேற்று ஒரு கிலோ தர்பூசணி 20 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு பழம் குறைந்தது 7 கிலோ அளவில் உள்ளது. கோடையின் வெப்பத்தை தணிக்கவும் தாகத்தை தீர்க்கவும் தர்பூசணி பழத்தை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். அடுத்த 2 மாதங்களில் பழங்களின் விலை கூடும் என தர்பூசணி வியாபாரிகள் கூறுகின்றனர்.