/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆதார் சேவைக்கு அலைகழிப்பு --மாற்று ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பு
/
ஆதார் சேவைக்கு அலைகழிப்பு --மாற்று ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பு
ஆதார் சேவைக்கு அலைகழிப்பு --மாற்று ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பு
ஆதார் சேவைக்கு அலைகழிப்பு --மாற்று ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பு
ADDED : செப் 10, 2024 04:51 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையம் செயல்பாட்டை முறைப்படுத்தி மக்கள் அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆதார் சேவைக்காக நிரந்தர சேர்க்கை மையங்கள் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில் எல்காட் மூலம் சேவை வழங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் ஆதார் உடன் பான் கார்டு இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பான் கார்டு பெயர் ஒற்றுமைக்காக ஆதாரில் திருத்தம் உள்ளிட்ட பணிகள் அவசியமாகிறது. இது தவிர பள்ளி மாணவர்கள், மத்திய மாநில அரசுகளின் சலுகை திட்டங்களை பெறுவோர் என அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ராஜபாளையத்தில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களில் தினமும் கூட்டம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பகுதியில் இருந்து வரும் கிராமப் பகுதியினர் மாணவர்கள் வசதிக்கு ஏற்ப இப்பணிகளை முறைப்படுத்த வேண்டும். இது குறித்து சிவராமன்: ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கிராமப்பகுதியில் இருந்து திருத்தத்திற்காக வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வருவோருக்கு முறையாக டோக்கன் வழங்கி சேவைகள் வழங்குவது இல்லை.
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. சேவை மையம் திறப்பு அடைக்கப்படும் நேரம் குறித்த குறிப்பு பொதுமக்களின் பார்வையில் படும்படியும், விடுமுறை காலங்களை முறையாக அறிவிப்பு எழுதி வைக்க வேண்டும். மாணவர்களுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அந்தந்த பகுதியில் சிறப்பு ஆதார் முகாம்கள் ஏற்படுத்தி கூட்டத்தை குறைக்க வேண்டும்.

