ADDED : ஜூலை 25, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வு நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜவகர் மைதானம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் தலைமை வகித்தார்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசுந்தர், நகர பொறுப்பாளர்கள் ராமசுப்பிரமணி, பசும்பொன், அய்யனார் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை தெரிவித்தனர்.