ADDED : ஜூலை 14, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஜூலை 15 -
அருப்புக்கோட்டையில் சிவசக்தி மக்கள் நல அறக்கட்டளையின் துவக்க விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிறுவனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. தனியார் சேனல் சாய் செந்தில் மாற்றும் நாகராஜ் சுவாமிகள், வேலாயுதம் சுவாமிகள், பட்டிமன்ற பேச்சாளர் துரைப்பாண்டியன், மணிமாலா, ஆன்மீக சொற்பொழிவாளர் கலைச்செல்வி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஏற்பாடுகளை அற கட்டளை ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
