/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருநங்கைகளுக்கு நலத்திட்ட முகாம்
/
திருநங்கைகளுக்கு நலத்திட்ட முகாம்
ADDED : ஜூன் 07, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: திருநங்கைகள் பயன்பெறும் வகையில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட சிறப்பு முகாம் ஜூன் 21ல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.
இதில் திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல், ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல், வாக்காளர் அட்டை வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படும். எனவே அந்நாளில் திருநங்கைகள் பங்கேற்று பயன்பெற வேண்டும், என்றார்.