/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் குழாய் பதிக்கும் போது பாதாள சாக்கடை குழாயும் உடையுது
/
குடிநீர் குழாய் பதிக்கும் போது பாதாள சாக்கடை குழாயும் உடையுது
குடிநீர் குழாய் பதிக்கும் போது பாதாள சாக்கடை குழாயும் உடையுது
குடிநீர் குழாய் பதிக்கும் போது பாதாள சாக்கடை குழாயும் உடையுது
ADDED : ஆக 02, 2024 06:46 AM

விருதுநகர் : விருதுநகரில் தந்தி மரத்தெருவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது பாதாளசாக்கடை குழாய் சேதமானது. அதை அதே அளவுள்ள குழாய் பொருத்தி சரி செய்யாமல் குறைந்த அளவுள்ள குழாய் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் பாதாளசாக்கடை லீக் ஆக வாய்ப்புள்ளது.
விருதுநகர் நகராட்சி பகுதிகளிலும், நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதிகளிலும் புதிய தாமிரபரணி திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணி வேகமெடுத்து நடந்து வருகிறது. இதற்காக வழிநெடுகிலும் குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன.
புதிய தாமிரபணி குடிநீர் திட்ட பணி முடிந்து செயல்பாட்டிற்கு வந்தால் விருதுநகர் நகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இந்நிலையில் மெயின் ரோடு பகுதிகளில், தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்கும் போது அருகில் உள்ள பாதாளசாக்கடை குழாய்களும் சேதம் அடைகின்றன.
இவற்றில் 4 இன்ச் குழாய் போட்டு சரி செய்ய வேண்டும். ஆனால் அதை விட குறைந்த அளவிலான குழாயை போட்டு விட்டு மண்ணை போட்டு மூடுகின்றனர். இது வார்டு கவுன்சிலர்கள் கண்காணிக்கும் பட்சத்தில் சரி செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் அதற்கு வாய்ப்பில்லை.
நகராட்சி பொறியியல் பிரிவினரும் முழு நேரம் கண்காணிப்பதில்லை. எனவே குறைந்த அளவு கொண்ட குழாயை போட்டு விடுவதால் வரும் நாட்களில் பாதாளசாக்கடை லீக் ஆகி ரோடு சேதமாக வாய்ப்புள்ளது. தந்திமரத்தெருவில் குழாய் பணியின் போது பாதாளசாக்கடை லைன் உடைந்தது. இதை குறைந்த அளவு கொண்ட பைப்பை போட்டு பொருத்தி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து இதை சரி செய்ய வேண்டும்.