ADDED : மார் 29, 2024 05:51 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசியில் மனைவி ஜெயலட்சுமியை 23, கொலை செய்த கணவர் சரவணகுமாருக்கு 24, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார், இவரது மனைவி ஜெயலட்சுமி, காதல் திருமணம் செய்த இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சரவணகுமார் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஜெயலட்சுமி கோபித்துக் கொண்டு தனது சகோதரர் ராஜமாணிக்கம் வீட்டில் இருந்துள்ளார்.
2020 ஜூன் 26 மதியம் 12:30 மணிக்கு மனைவி ஜெயலட்சுமியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி சரவணகுமார் கொலை செய்துள்ளார். சிவகாசி கிழக்கு போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

