ADDED : செப் 01, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா, 20வது ஆண்டு விழா நேற்று காலை நடந்தது. மன்ற தலைவர் சர்வஜித் தலைமை வகித்தார்.
புலவர் வெள்ளை, அருள் நிதி வேலாயுதம் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராமர் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். ஆழியாறு மனவளக்கலை பேராசிரியர்கள் சக்தி குமாரவேல், லதா, வழக்கறிஞர் நல்லதம்பி பேசினர். சிறப்பு தம்பதிகள் ராஜகோபாலகிருஷ்ணன்- வள்ளி செல்வி, ஜெயக்குமார் -ஆனந்த கீதா உட்பட ஏராளமான தம்பதிகள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் ஆப்பிள், ரோஜாப்பூ கொடுத்து தங்கள் அன்பை பரிமாறி கொண்டனர். துணை பேராசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.