/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலக்கடலை விவசாயத்தை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகள்
/
நிலக்கடலை விவசாயத்தை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகள்
நிலக்கடலை விவசாயத்தை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகள்
நிலக்கடலை விவசாயத்தை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகள்
ADDED : ஆக 02, 2024 06:47 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணர், காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்படும் நிலக்கடலை விவசாயம் காட்டுப் பன்றிகளால் அச்சுறுத்தப்படுகின்றன. இதனால் பலர் கடலையை விளைவிப்பதை கைவிடும் அளவுக்கு மனம் நொந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் சூரியகாந்தி, எள் ஆகிய எண்ணெய் வித்து பயிர்களுக்கு அடுத்தப்படியாக நிலக்கடலை 6 ஆயிரம் எக்டேருக்கு விளைவிக்கப்படுகிறது. மல்லாங்கிணர், காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் கிராமங்களிலும் அருப்புக்கோட்டையில் புலியூரான் உள்ளிட்ட கிராமங்களிலும் நிலக்கடலை விவசாயம் அதிகளவில் நடக்கிறது. பொதுவாக செம்மண் காடுகளில் நன்றாக வளரும் இவற்றை மானாவாரிக்கு அடுத்தபடியாக கைகொடுக்கும் பயிராக சில விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக நிலக்கடலை விவசாயத்தை காட்டு பன்றிகள் அச்சுறுத்தி வருகின்றன. தற்போது சீசன் நேரம் என்பதால் நிலக்கடலை அறுவடை நடந்து வருகிறது. ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் லாபமடைந்து வருகின்றனர். அதே நேரம் காட்டுபன்றிகளால் சேதமும் உள்ளது.
விவசாயி சோனைமுத்து கூறியதாவது: வரலொட்டி துலுக்கன்குளம் மெயின் ரோட்டில் 1 ஏக்கருக்கு நிலக்கடலை சாகுபடி செய்துள்ளேன். 38 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ.2500க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் 16 முதல் 17 மூடைகள் வரை சாகுபடி செய்ய முடியும். எங்களுக்கு இன்று வரை பெரிய அச்சுறுத்தலாக இருப்பது காட்டுப்பன்றிகள் தான். கருவேலங்காடுகளில் மறைந்திருந்து இரவு நேரத்தில் வந்து தாக்குகின்றன. இதனால் இழப்பு ஏற்படுகிறது. நிலக்கடலை விவசாயிகள் பலர் இந்த விவசாயத்தையே விட்டு விட துணியும் அளவுக்கு தொல்லை உள்ளது. காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், என்றார்.