/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னேறத் துடிக்கும் மாவட்ட திட்டத்தில் வேளாண் செயல்பாடுகளும் தீவிரமாகுமா சிறப்பு திட்டம் அறிவிக்கப்படுமா
/
முன்னேறத் துடிக்கும் மாவட்ட திட்டத்தில் வேளாண் செயல்பாடுகளும் தீவிரமாகுமா சிறப்பு திட்டம் அறிவிக்கப்படுமா
முன்னேறத் துடிக்கும் மாவட்ட திட்டத்தில் வேளாண் செயல்பாடுகளும் தீவிரமாகுமா சிறப்பு திட்டம் அறிவிக்கப்படுமா
முன்னேறத் துடிக்கும் மாவட்ட திட்டத்தில் வேளாண் செயல்பாடுகளும் தீவிரமாகுமா சிறப்பு திட்டம் அறிவிக்கப்படுமா
ADDED : மார் 07, 2025 02:07 AM
விருதுநகர்:தமிழகத்தில் முன்னேறத்துடிக்கும் மாவட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு அதில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 49 காரணிகள் உள்ள நிலையில் அதில் ஒன்றான வேளாண் செயல்பாடுகளை தீவிரப்படுத்த சிறப்பு திட்டம் அறிவிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அளவில் மத்திய அரசின் நிடி ஆயோக் சார்பில் பின்தங்கிய 112 மாவட்டங்களில் முன்னேறத் துடிக்கும் மாவட்ட திட்டம் 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் நிடி ஆயோக் அமைப்பு வெளியிடுகிறது.
பிப்ரவரி பட்டியலில் விருதுநகர் மாவட்டம் சுகாதாரம், ஊட்டச்சத்தில் இந்திய அளவில் முதலிடம் பெற்று ரூ.3 கோடி பரிசு பெற தகுதி அடைந்துள்ளது.
2019, 2022லும் விருதுநகர் மாவட்டம் சுகாதாரத்திற்கு முதலிடம் பெற்று விருதும், பரிசும் பெற்றுள்ளது. பிற காரணிகளில் முன்னேற்றம் அடைந்தாலும் வேளாண் செயல்பாடுகளிலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு என்னென்ன தேவை உள்ளது என்பதை கேட்டு அதை செயல்படுத்த அரசு கவனம் செலுத்தி மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தலாம். பருவநிலை மாற்றத்தால் திடீரென பெய்யும் மழையால் மக்காசோளம், நெல் பாழாகும் சூழல் உள்ளது. அவற்றை பாதுகாக்க தார்ப்பாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதை முன்னேறத்துடிக்கும் மாவட்ட திட்டத்தில் செயல்படுத்தலாம். உலர் களங்கள் பல புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளன.
இதை சீரமைக்கவும் இத்திட்டத்தை பயன்படுத்தலாம். இதற்கு அரசு சிறப்பு கவனம் எடுத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் தார்ப்பாய், உலர்களங்கள் அமைக்க நிதி ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.