/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான சுய உதவி குழு கட்டடம் விபத்திற்கு முன் அப்புறப்படுத்தப்படுமா

ADDED : பிப் 27, 2025 01:17 AM

காரியாபட்டி; காரியாபட்டி வல்லப்பன்பட்டியில் படு மோசமாக இருக்கும் சுய உதவி குழு கட்டடத்தை விபத்திற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி வல்லப்பன்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு முன் சுய உதவி குழு கட்டடம் கட்டப்பட்டது.
அக்குழுவினர் பயன்படுத்தி வந்த நிலையில்,  செயல்பாடுகள் சரிவர இல்லாததால்,  கட்டடத்தின் பயன்பாடு குறைந்தது. இதையடுத்து வேறு பயன்பாட்டிற்காகவும்,  ஆடு, மாடுகள் கட்டவும், பயறு வகைகள்,  நெல் ஆகியவற்றை உலர்த்தவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கட்டடம் சேதமடைந்ததால்,  10 ஆண்டுகளுக்கு  முன்  ரூ.47 ஆயிரம்  செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் சுய உதவி குழுவினர்  சரி வர பயன்படுத்தாததால் கட்டடம் படுமோசமாக மாறியது. ஆங்காங்கே  தூண்கள் உடைந்து வலுவிழந்து உள்ளன.  எப்போது இடிந்து விழுமோ என்கிற  நிலை உள்ளது.
சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடுகின்றனர். கால்நடைகள் அடைகின்றன. விபத்திற்கு முன் கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.