/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை - -- கோவை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுமா
/
மதுரை - -- கோவை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுமா
மதுரை - -- கோவை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுமா
மதுரை - -- கோவை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுமா
ADDED : மார் 05, 2025 05:56 AM
விருதுநகர்: மதுரையில் இருந்து கோவை (16772), கோவையில் இருந்து மதுரைக்கு (16721) இயக்கப்படும் ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு விருதுநகர் வியாபாரத் தொழில் துறைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத் தலைவர் வி.வி.எஸ்., யோகன் அனுப்பிய கடிதம்: மதுரையில் இருந்து கோவைக்கு (16772), கோவையில் இருந்து மதுரைக்கு (16721) தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்து இயக்கினால் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு செல்வோர் பயன் அடைவார்கள்.
மேலும் துாத்துக்குடி, கர்நாடகாக மாநிலத்தின் மங்களுர் துறைமுகங்களுக்கு இடையே துாத்துக்குடியில் இருந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கோயம்புத்துார், பாலக்காடு, திருச்சூர் வழியாக மங்களுர் இணைக்கும் விதமாக ரயில்களை இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பகல் நேர வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நிற்காமல் செல்கிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், சாத்துாரைச் சுற்றியுள்ள பயணிகளுக்காக விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.