/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இ சேவை மையங்களில் சர்வர் பிரச்னைக்கு விடிவு காலம் வருமா
/
இ சேவை மையங்களில் சர்வர் பிரச்னைக்கு விடிவு காலம் வருமா
இ சேவை மையங்களில் சர்வர் பிரச்னைக்கு விடிவு காலம் வருமா
இ சேவை மையங்களில் சர்வர் பிரச்னைக்கு விடிவு காலம் வருமா
ADDED : ஜூன் 20, 2025 11:54 PM

ராஜபாளையம்: மாவட்டத்தில் உள்ள இ- சேவை மையங்களில் சர்வர் பிரச்னை காரணமாக அரசு அறிவித்துள்ள ஜாதி சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட அடிப்படை சான்றிதழ்களை பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்ட சேவைகளை நேரடியாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் அணுகி பெறுவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதற்காக பல்வேறு திட்ட சேவைகளை ஆன்லைன் வழியே மக்கள் எளிதாக பெற பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது.
இதில் மின்னாளுமை முகமை, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான அரசு இ- சேவை மையங்கள் செயல்படுகின்றன.
பொதுமக்கள் இவற்றை சுலபமாக அணுகி முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு போன்ற சேவைகளை எந்தவித இடை தரகர் இன்றி விண்ணப்பிக்கலாம். சேவைகளுக்காக தலா ரூ. 60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கி உயர்கல்விக்கு சேர ஜாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவை அவசியம். இவற்றுக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையங்களை நாடுகின்றனர்.
ஏற்கனவே இ- சேவை மையங்களில் சர்வர் பிரச்சனை நிலவி வரும் நிலையில் பெரும்பாலான நேரம் இதை காரணமாக கூறி சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை அணுகும் போது இதே பதில் வருகிறது. கிராமப் பகுதியில் இருந்து வருபவர்கள் ஒவ்வொரு குறையும் தொடர்பு கொண்டு திரும்பி செல்வதால் இ சேவை மையங்கள் மேல் பொது மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.
பிரச்சனைகள் குறித்து தமிழக மின்னாளுமை முகமையின் சார்பில் கொடுத்துள்ள வாடிக்கையாளர் சேவை மைய இலவச எண் மையங்களில் அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க தொடர்பு கொண்டால் பிஸி என்றே வருகிறது. இணைப்பு கிடைத்தாலும் எதிர் முனையில் பதில் முறையாக கிடைக்காததுடன் விசாரிக்கிறோம் என்று இணைப்பு முடிந்து விடுகிறது.
தொடங்கி இத்தனை ஆண்டுகள் கடந்தும் இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்சனையை காரணமாக கூறி வரும் சிக்கல் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.