/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 ‛வதந்தி கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

ADDED : ஆக 18, 2024 04:09 AM

விருதுநகர் : மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 பெற ஆக. 17, 19, 20., ஆகிய தேதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என கிளம்பிய வதந்தி' யை நம்பி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர்.
தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 கிடைக்காதவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆக. 17, 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாமில் மனுக்களை கொடுக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற பொய் செய்தி' சமூக வலை தளங்களில் பரவியது.
அருப்புக்கோட்டை, திருச்சுழி, ராஜபாளையம், சாத்துார், சிவகாசி உள்பட பல பகுதிகளில் இருந்து நேற்று காலை 11:00 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை அளிப்பதற்காக பெண்கள் வந்து குவிந்தனர். இப்படி வந்த பெண்களிடம் சமூக வலைதளத்தில் பரவிய தகவல் பொய்யானது என அதிகாரிகள் எடுத்துக்கூறி மனுக்களை பெற்று திரும்ப செல்ல அறிவுறுத்தினர். மேலும் இது போன்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.