/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரங்கள் நிறைந்து சோலை வனமான சூழல்; பசுமையான செந்திக்குமார நாடார் கல்லுாரி வளாகம்
/
மரங்கள் நிறைந்து சோலை வனமான சூழல்; பசுமையான செந்திக்குமார நாடார் கல்லுாரி வளாகம்
மரங்கள் நிறைந்து சோலை வனமான சூழல்; பசுமையான செந்திக்குமார நாடார் கல்லுாரி வளாகம்
மரங்கள் நிறைந்து சோலை வனமான சூழல்; பசுமையான செந்திக்குமார நாடார் கல்லுாரி வளாகம்
ADDED : மே 06, 2024 12:20 AM

மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தாங்கள் பயிலும் இடங்களில் மரங்களை வைத்தும், பராமரிப்பு செய்தும் வருகின்றனர். விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் முன்னாள் முதல்வர் சுந்தரபாண்டியன் முயற்சியால் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள், மாணவர்கள் தங்கள் பிறந்த நாளுக்கு கல்லுாரி வளாகத்தில் மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி நடப்பட்ட மரங்கள் தற்போது ஏப்ரல் கூல் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு தினந்தோறும் புதிய மரங்கள் நடவு செய்யப்படுகிறது.
பெருகி வரும் தொழிற்சாலைகளால் வெளியேறும் புகை, வாகனங்கள் மூலம் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடு இவற்றால் மழைக்காலம், வெயில்காலம், பனிக்காலம் உள்ளிட்ட காலநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காடுகளை அழித்தல், விளை நிலங்களை பிளாட்டுகளாக மாற்றுதல் போன்றவற்றால் பருவநிலையின் சமநிலை தவறிவிட்டது.
கல்லுாரிகள், பள்ளிகள் ஆகிய இடங்களில் பயிலும் மாணவர்களுக்கு வளர்பருவத்திலேயே இயற்கை மாசுபடுத்தாமல் வாழ்கையை வாழ்தல், இயற்கையை பேணுதல் போன்றவற்றை பற்றி தெளிவான அறிவுரை வழங்குவது முக்கியமானதாக உள்ளது.
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்களில் அதிக அளவில் பறவைகள் வசித்து வருவதால் சரணாலயம் போல உள்ளது. மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் சோலைவனமாக காட்சியளிக்கிறது. மேலும் வேப்பமரம், தேக்கு, புளியமரம், சவுக்கு, நாவல் மரம், பவள மல்லிகை, பூவரசம் மரம், புல்லட் மரம், வாகை, பீப்பல் மரம், ரோஜா ஆகிய பலவகை மரங்களும், பூக்கும் தாவரங்களும் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
மியாவாக்கி காடுகள்
சாரதி, முதல்வர், செந்திக் குமார நாடார் கல்லுாரி, விருதுநகர்: ஜப்பானிய காடு வளர்ப்புகளில் ஒரு முறையான மியா வாக்கி' என்ற காடு உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் கல்லுாரி வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இங்கு இயற்கை வளம், மருத்துவ குணம், அரிய வகை மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மாசற்ற சுத்தமான காற்றினை மாணவர்கள் சுவாசிக்க முடிகின்றது.
சரணாலயம் போல மாற்றியுள்ளோம்
பிரேம்குமார், தாவரவியல் பேராசிரியர், செந்திக் குமார நாடார் கல்லுாரி, விருதுநகர்: செந்திக் குமார நாடார் கல்லுாரியில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் இணைந்து தொடர்ந்து பல வகை மரங்களை நடவு செய்து பராமரித்து வருகிறோம். தற்போது அடர்ந்த வனப்பகுதி போல கல்லுாரி வளாகம் முழுவதும் காணப்படுகிறது. சுற்றுப்புறம் முழுவதிலும் மரங்களை வளர்த்து சரணாலயம் போல மாற்றியுள்ளோம்.