ADDED : ஆக 10, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை பூஜை பணிக்காக சென்ற வத்திராயிருப்பு மண்டல துணை தாசில்தார் சசிகுமாரை, சோதனை சாவடியில் இருந்த தலைமை காவலர் ஒருவர், பணிக்காக அனுமதிக்காமல், சிவகாசி சப் கலெக்டர் உத்தரவை காண்பித்த போதும் அலைபேசியை தட்டி விட்டு தகாத வார்த்தைகளால் பேசி கண்ணிய குறைவாக நடத்திய தலைமை காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பணி புறக்கணித்து வெளிநடப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து வட்டக்கிளைகளிலும் பணி புறக்கணிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். போலீஸ் மீது தற்காலிக பணிநீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
