நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் உலக முதலுதவி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த கிருஷ்ணன், டாக்டர் பிந்தியா கலந்து கொண்டு விபத்து உள்ளிட்ட அனைத்து இடர்களுக்கும் முதலுதவி சிகிச்சைக்கான அவசியம் குறித்து சான்றுகளுடன் விளக்கினர்.
உடல் நலத்திற்கு கேடு தரும் உணவுகளால் ஏற்படும் நோய்கள், தடுக்கும் முறைகள் உடற்பயிற்சியின் அவசியம், சுற்றுப்புற துாய்மை பற்றி எடுத்து கூறினர்.
முதல்வர் ஜமுனா தலைமை வகித்தார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி செய்திருந்தார்.