sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்டத்தில் உலக யோகா தின விழா

/

மாவட்டத்தில் உலக யோகா தின விழா

மாவட்டத்தில் உலக யோகா தின விழா

மாவட்டத்தில் உலக யோகா தின விழா


ADDED : ஜூன் 23, 2024 03:16 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் சண்முகையா, முதல்வர் முத்துலட்சுமி தலைமை வகித்தனர். பள்ளி மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்தனர்.

l சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கணேசன் முருகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலாஜி தலைமை வகித்தார். இயற்கை மருத்துவர் மாறன்ஜீ, யோகா மாஸ்டர் கிரிதரன் பேசினர். மாணவர்கள் யோகா செய்தனர். தமிழ் துறை தலைவர் கிளிராஜ், பொருளாதாரத்துறை தலைவர் வேல்முருகன், உடற்பயிற்சி இயக்குனர் சாந்தி கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணி திட்ட தொண்டர் கெஜலட்சுமி நன்றி கூறினார்.

l சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி உடற்கல்வித்துறை நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி வரவேற்றார். சிவகாசி ஈஷா யோகா அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 550 பேர் பங்கேற்றனர். உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவி பேராசிரியர் தேவி நன்றி கூறினார்.

l திருத்தங்கல் அருணா கிரியேட்டிவ் மைன்ஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 23 வயது மூதாட்டி விஜயலட்சுமி உடற் பயிற்சி, யோகா குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பள்ளி தாளாளர்கள் சுந்தரவல்லி சாதனா ரேவதி முதல்வர் முனியாண்டி தலைமை வகித்தனர். யோகா மாஸ்டர் இசக்கிமுத்து தொகுத்து வழங்கினார்.

l சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் விளையாட்டு துறை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாணவர்கள் யோகா செய்தனர். தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மதனகோபால் செய்தார்.

l அனுப்பன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் ரங்கராஜ் யோகா பயிற்சி அளித்தார். மாணவர்கள் யோகா செய்தனர். மூத்த ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

l விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா போட்டிகள் நடந்தன. மாணவர் பிரிவில் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறையை சேர்ந்த ஸ்ரீவாசன், மாணவிபிரிவில் முதலாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறையை சேர்ந்த நித்யா முதல் பரிசை பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவனேஷ் குமார் பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள கல்லுாரி செயலாளர் தர்மராஜன், ஸ்ரீமுருகன், முதல்வர் செந்தில் பாராட்டினர்.

l கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில்என்.சி.சி., முப்படைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், என்.சி.சி., யூனிட் பட்டாலியன் ஜே.சி.ஓ., பெருமாள் துவங்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் யோகா பயிற்சி அளித்தார்.ஏற்பாடுகளை தரைப்படை அதிகாரி வைரமணிபாண்டியன், கப்பல்படை அதிகாரி ஜெயப்பிரகாஷ், விமானப்படை அதிகாரி பாலாஜி செய்தனர்.

l ராஜபாளையம் ஸ்ரீ ரமணா அகாடமி மேல்நிலைப் பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசனங்களை செய்து காட்டினர். யோகா ஆசிரியர் பூசை துரை பயிற்றுவித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி, பள்ளி ஆலோசகர் டாக்டர் கணேசன், முதல்வர் கல்யாணி, துணை முதல்வர் இந்திரா, நிர்வாக அலுவலர் ராமராஜ் கலந்து கொண்டனர்.

l கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜே.சி.ஐ தலைவர் பானுப்பிரியா தலைமையில் நடந்தது. முதுநிலை முதல்வர் அருணா தேவி தாளாளர் திருப்பதி செல்வன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்கள் யோகா ஆசிரியர் நீராத்து லிங்கம் முன்னிலையில் பல்வேறு ஆசனங்களை செய்தனர். ஏற்பாடுகளை ஜே.சி.ஐ செயலாளர் சத்யா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

l அன்னப்ப ராஜா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். உடற்கல்வி இயக்குனர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

l ஆர் எஸ் எஸ் சார்பில் ராஜபாளையம் பழைய பாளையம் பெரிய சாவடி முன்பு யோகாசன நிகழ்ச்சி நடந்தது. அனைத்து பரிவார் உறுப்பினர்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆர். எஸ்.எஸ் வட்டார தலைவர் ரவி செய்திருந்தார்.

l சாத்துார் அண்ணா நகர் பூங்காவில் நகர பா.ஜ.,சார்பில் சர்வதேசயோகா தினம் கொண்டாடப்பட்டது. நகர பொருளாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஜெயபாலன் வரவேற்றார். யோகேஷ் ,பிரேம் வாழ்த்தினார்கள் பா.ஜ., தொண்டர்கள் பங்கேற்று யோகா செய்தனர்.

l ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் பீல்டு மழலையர் துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா தாளாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. யோகாவின் பயன்கள் குறித்து முதல்வர் வனிதா மற்றும் ஆசிரியர்கள் பேசினர். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us