/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் வழிபாடு நாளை முதல் அனுமதி
/
சதுரகிரியில் வழிபாடு நாளை முதல் அனுமதி
ADDED : செப் 13, 2024 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், செப்., 15ல் ஆவணி மாத பிரதோஷம், செப்.,17ல் புரட்டாசி மாத பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. அதை முன்னிட்டு, நாளை முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்கள், தினமும் காலை 7:00 - மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது, வெயிலின் தாக்கத்தால் ஓடைகளில் நீர்வரத்து குறைந்தும், வனப்பகுதி வறண்டும் காணப்படுகிறது. எனவே, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களையும், பிளாஸ்டிக் பைகளையும் பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.