/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் யோகா தின கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் யோகா தின கொண்டாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 04:43 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் உலக யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன.
விருதுநகர் நோபிள் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் கல்லுாரி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ தலைமையில் நடந்தது. முதல்வர் வேல்மணி வாழ்த்தினார். கல்லுாரி நிர்வாக அதிகாரி தங்கராஜ் பேசினார். மாணவிகள் பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காட்டினர். உடற்கல்வி ஆசிரியர் நந்தினி நன்றிக்கூறினார்.
விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தக்குமார் தலைமையில், வட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான ராஜகுமார் முன்னிலையில் யோகா செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜே.எம்.1., நடுவர் கவிதா, ஜே.எம்.2: நடுவர் கலைநிலா பங்கேற்றனர்.
*பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளி மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. கே.வி.எஸ்., பள்ளி செயலாளர் முரளிதரன் வரவேற்றார்.
பா.ஜ., மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி ரசிங்க பெருமாள் பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் திவாகர் பங்கேற்றனர்.
* அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
*அருப்புக்கோட்டை வுமன்ஸ் இன்டர்நேஷனல் யோகா நிலையத்தில் யோகா ஆசிரியர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். பாரத் யோகா ஆசிரியை சுந்தரானந்தம் முன்னிலை வகித்தார். யோகா போட்டிகள் நடந்தன. இதில் மாணவி வினிஷா முதல் பரிசினை வென்றார். பல விதமான ஆசனங்களை ஆசிரியர்கள் செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை யோகா நிபுணர் லட்சுமி தேவி செய்தார்.
*கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் மனவளக்கலை மன்ற யோகா மாஸ்டர் சரமாரி ராஜ், பேராசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தேசிய மாணவர் படை மாணவர்கள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.
*சாத்துார் மேட்ட மலை கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லுாரியில் தலைவர் ராஜு தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வாழ்த்தினார். மாவட்டஇளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன், டாக்டர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
சிவகாசி யோகா ஆசிரியர் சாரதா மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். மாணவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நேரு யுவகேந்திராவுடன் இணைந்து கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முத்து மாரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் உடற்கல்வித்துறை சார்பில் 10 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.
உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி வரவேற்றார். சிவகாசி அரசு மருத்துவமனை டாக்டர் மணிமேகலை, யோகா ஆசிரியர் மணிமாலா பேசினர். கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவிகள் யோகாசனம் செய்தனர். யோகா சங்கல்பம் எடுத்துக் கொண்டனர்.
பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி உடற்கல்வி இயக்குனர் சசி பிரியா நன்றி கூறினார்.
*சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஷ்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் பேசினர்.
பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் பங்கேற்றனர்.
யோகா பயிற்சியாளர்கள் ரமேஷ், அசோக் பயிற்சி அளித்தனர். மகளிர் மன்ற திட்ட அலுவலர் ரிபயா மீரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட நேரு யுவகேந்திரா, கல்லுாரி உடற்கல்வித்துறை செய்தனர்.
------*சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் ஆண்கள் விடுதி சார்பில் நடந்த விழாவில் கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்து பேசினார். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்தனர். ஏற்பாடுகளை விடுதிக்கான அறிமுக பாண்டி செய்தார்.
------*சிவகாசி கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியில் தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் தனலட்சுமி பேசினார். மாணவர்கள், ஆசிரியர்கள் யோகாசனங்கள் செய்தனர்.
உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் பாண்டி, ஆசிரியர்கள் செய்தனர்.
*சிவகாசி ரிசர்வர் லைன் லார்டு பி.சி.ஏ ஏ. லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரவீந்திரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் காளீஸ்வரன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பொருளாளர் கண்ணன் வாழ்த்தினார்.
மாணவர்கள் பல்வேறு ஆசனங்கள் செய்தனர். சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனை சந்தன தேவி பேசினார்.
ஆரம்பப் பள்ளி பொறுப்பாசிரியர் பிரதீபா தங்கம் நன்றி கூறினார்.
*ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தின விழாவில் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜோஸ்பிரியா வரவேற்றார்.
பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகாவின் நன்மைகள் குறித்து பேசினார். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். ஆசிரியை தாரணி நன்றி கூறினார்.