ADDED : மே 24, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பு: சமூக வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் வழங்கப்படுகிறது.
15 வயது முதல் 35 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2023-24ல் செய்த சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். அவ்வாறு செய்த சேவை கண்டறியப்பட கூடியதாக இருக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் பெற்ற நன்னடத்தை சான்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை காலநீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அணுகலாம், என்றார்.