/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
யுடியூபர்கள் சித்ரா, திவ்யா, கார்த்திக் குண்டர் சட்டத்தில் கைது
/
யுடியூபர்கள் சித்ரா, திவ்யா, கார்த்திக் குண்டர் சட்டத்தில் கைது
யுடியூபர்கள் சித்ரா, திவ்யா, கார்த்திக் குண்டர் சட்டத்தில் கைது
யுடியூபர்கள் சித்ரா, திவ்யா, கார்த்திக் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மார் 10, 2025 11:25 PM

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்த வழக்கில் கைதான யுடியூபர்கள் சித்ரா, திவ்யா, கார்த்திக் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா 30, ஈரோட்டை சேர்ந்த கார்த்திக் 30, யூடியூபர்களான இவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்துள்ளதாக கடலூரைச் சேர்ந்த யுடியூபர் சித்ரா 54, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில், ஜனவரி மாதம் புகார் செய்தார்.
பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களிடமும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தியதில் புகார் உறுதியானது. ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் விசாரித்தபோது சித்ரா சொல்லித்தான் வீடியோ எடுத்ததாக கார்த்தி கூறினார்.
இதனையடுத்து 3 பேர் மீதும், ஆபாச ரீல்ஸ் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த ஆனந்த ராமன் 24 என்பவர் மீதும், போக்சோ சட்டத்தின் 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.
சித்ரா, திவ்யா மதுரை சிறையிலும், கார்த்திக் விருதுநகர் சிறையிலும் உள்ளனர். ஜாமின் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏற்கனவே சித்ரா மீது 5, திவ்யா மீது 3, கார்த்திக் மீது ஒரு வழக்கும் உள்ள நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்துாரிலும் இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, விருதுநகர் எஸ்.பி கண்ணன், பரிந்துரையின் பேரில் மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.