/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் தெரு நாய் கடித்து 10 பேர் காயம்
/
சாத்துாரில் தெரு நாய் கடித்து 10 பேர் காயம்
ADDED : ஜூலை 22, 2025 03:19 AM
சாத்துார்: சாத்துார் சிவன் கோயில் தெற்கு மாட வீதியில் நேற்று நடந்து சென்றவர்களை தெருநாய் அடுத்தடுத்து கடித்ததில் 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சாத்துார் நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று காலை 10:30 மணிக்கு சிவன் கோயில் தெற்கு மாடவீதியில் படுத்து கிடந்த தெரு நாய் ஒன்று வெறி பிடித்து அவ்வழியாக நடந்து செல்பவர்களை அடுத்தடுத்து கடிக்க துவங்கியது.
அருண்குமார், 38. பாலமுருகன், 30. சிறுமி மது நிஷா, 10. படந்தால் ராமகிருஷ்ணன்,55. மன்னார்கோட்டை ரோடு சுப்புலட்சுமி, 44. சந்தையூர் இலங்கேஸ்வரி, 45. சத்திரப்பட்டி விமலா, 27. சாத்துார் செய்யது 34. விஜயலட்சுமி 63, கருப்பசாமி, 62. ஆகியோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர் .
நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி கூறியதாவது,''தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கருத்தடை செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. புளுகிராஸ் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர் மூலம் விரைவில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்படும். மக்களை கடித்த நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.